ஓரளவுக்கு தசாவதாரம் படம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்துக்கான பரபரப்பு செய்திகளில் விடுபட்டு தன் அடுத்த படமான மர்மயோகி படத்தில் பிஸியாகிவிட்டார் கமல்.
சமீபத்தில் வந்த தன்னுடைய எல்லா படத்திற்கும் இயக்குனர் என்று எவருடையவரின் பெயரையோ போட்டுக் கொண்டு தானே இயக்குவார். ஆனால் இந்த மர்மயோகி படத்தை தானே எழுதி இயக்கப் போவதாக ஒப்புக்கொண்டார். அதன்படி ஒவ்வொரு வேலையாகத் தொடங்கிவிட்டார்.
மேலும், தானே எழுதி இயக்குவதோடு பிரபல தயாரிப்பு நிறுவனமான சாய்மீராவுடன் சேர்ந்து தானே தயாரிக்கவும் செய்கிறார். இப்படம் தமிழில் மட்டும் இல்லாமல் பல மொழிகளோடு, ஆங்கிலத்திலும் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
அதனால் எவ்வளவு பட்ஜெட் படம் என்று கணிக்க முடியாதென்கிறார். அத்தோடு தனக்கு இணக்கமான, தான் சொல்வதை மட்டும் கேட்கக்கூடிய தொழில்நுட்ப கலைஞர்களையும் தேடி வருகிறார்.
தசாவதாரம் படத்தை விடவும், அதிகம் பேசவைப்பதோடு 'மர்மயோகி'யை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். தன் லட்சியப் படைப்பான 'திப்பு சுல்தான்' படத்துக்கு இணையாக இந்தப் படமும் இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார் உலக நாயகன். அசத்துங்க கமல் சார்.