விருதும் கிடைக்கும் வசூலும் இருக்கும்!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (19:51 IST)
மண் சார்ந்த விஷயங்களை அழகாகக் காட்டக் கூடியவர் வசந்தபாலன். இதற்கு ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்த 'வெயில்' படமே சாட்சி. அந்த படத்திற்குப் பின் மீண்டும் மண் சார்ந்த கதையையே 'அங்காடித் தெரு'வாக்கி தற்போது இயக்கி வருகிறார்.

பிரபலமான பத்திரிக்கை விகடன். இதன் விகடன் டாக்கீஸ் தான் படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்திவிட்டு இறுதிக் காட்சிகளுக்காக நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய ஊர்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

தனக்கு காட்சிகள் திருப்தியாக வரும் வரை வேலை வாங்கிக் கொண்டே இருப்பவர் வசந்தபாலன். ூட்டிங் நன்றாக எடுங்கள் என்று ஒப்புதல்¨ அளித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். எனவே அவசரம் இல்லாமல் நிதானமாக படம்பிடித்து வருகிறார்.

சென்ற படமான 'வெயில்' வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தந்தது. இந்த 'அங்காடித்தெரு' வசூலிலும் சாதனை படைத்து பல விருதுகளும் பெறட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்