சம்பளமும் சுந்தர் சி-யும்!

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (19:44 IST)
முன்னணி நடிகைகள் கொடுத்த டார்ச்சரால் மனம் நொந்திருக்கிறார் இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி.

பல நடிகைகள் இவரோடு ஜோடி சேர்ந்து நடித்தால் வயதானவரோடு நடி‌ப்பதாக‌ச் சொ‌ல்‌லி இள‌ம் ‌ஹீரோக்கள் தங்களை நடிக்க அழைக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறார்கள். இதை சிலர் நேரடியாகவும், மறைமுகமாவும் சொல்லியும் புரிந்துகொள்வதாக இல்லை சுந்தர் சி.

அதனால், சுந்தர் சி-க்கு ஜோடியாக நடிக்க வேண்டுமென்றால்... இவ்வளவு கொடு என்று கோடி வரை சம்பளம் கேட்டிருக்கிறார்கள் சில நடிகைகள்.

நடிக்கமாட்டேன் என்று சொல்வதற்குப் பதிலாக இப்படி சம்பளம் கேட்டிருக்கிறார்கள். இப்போது புரிந்துகொண்டவர், இனி என் படங்களில் புதுமக நடிகைகளை அறிமுகம் செய்யப் போகிறேன் என்ற கூறிவருகிறார்.

எது எப்படியோ அப்படி அறிமுகமாகும் நடிகைகள் ஒன்றிரண்டு படங்கள் ஹிட் கொடுத்ததும், இப்போதுள்ள நாயகிகளைப் போல... அத்தனை லட்சம் கொடு... இத்தனை லட்சம் கொடு என்று கேட்காமல் இருந்தால் சரி. புதுமுகங்களே சுந்தர் சி-யை விடாதீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்