படங்களை இழந்த நாயகன் - நாயகி

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (17:58 IST)
என்னதான் ஒரு வருடத்தில் படம் முடித்துக் கொடுக்கிறேன் என்று பாலாவிடம் ஒப்பந்தம் வாங்கினாலும், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் படத்தை முடித்துக் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார் பாலா.

'நான் கடவுள்' படத்திற்கும் அப்படித்தான் ஓராண்டுக்குள் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று எழுதிக் கொடுத்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் முடிந்தும் படப்பிடிப்பு இன்னும் பாக்கியிருக்கிறது.

இதனால் பெரிய இழப்பு படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டும் இல்லாமல், அதில் நடிக்கும் ஆர்யா மற்றும் பூஜாவுக்கும்தான். ஆர்யாவுக்கு கிட்டத்தட்ட தமிழில் மட்டும் நான்கு படங்கள் நடிக்கும் வாய்ப்பு வந்தும், பாலாவிடம் ஆரம்பத்தில் ஒத்துக்கொண்டபடி வேறு படங்களில் நடிக்க முன்வரவில்லை.

இதனால் பல லட்சங்கள் இழப்பு. இவருக்கு நான்கு படம் என்றால், பூஜாவுக்கு பல மொழிகளில் கிட்டத்தட்ட பதினைந்து படங்களின் வாய்ப்புகளை இழந்திருக்கிறார்.

இதுபற்றி பாலாவிடம் பேச்சுவாக்கில் கேட்டால், என் படத்தில் ஹீரோ-ஹீரோயினாக நடிப்பது என்றால் சும்மாவா... நூறு படங்களில் கிடைக்கும் பேரும் புகழும் என் ஒரே படத்தில் பெற்றுவிடுவார்கள் என்ற மார்தட்டுகிறார் பாலா.

ஆனாலும், ஒரு படத்துக்கு மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பு மட்டுமே நடத்துவது ரொம்ப ஓவர்தான் பாலா சார்.

வெப்துனியாவைப் படிக்கவும்