நயன்தாராவை நம்பி எடுத்த படம்!

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (17:57 IST)
விஷால் நடித்து தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 'சத்யம்' எதிர்பார்த்த 'ரிசல்ட்' வராத காரணத்தால் மூட் அப்செட்டில் இருக்கிறார் விஷால்.

பல கோடிகளை வாரி இறைத்தும், கடுமையான உழைப்பைக் கொடுத்ததற்கான பலன் கிடைக்கவில்லையே என்று வருத்தத்தில் உள்ளார். அத்தோடு சென்சார் போர்டு மீதும் கோபத்தில் உள்ளார். காரணம் நயன்தாரா வரும் பல காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன.

பல காட்சிகளில், பாடல்களில் மிகவும் செக்ஸியாக வரும் நயன்தாராவால் இளம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும், ரிபீட் ஆடியன்ஸ் வருவார்கள் என்று எதிர்பார்த்தது சென்சாரின் கத்தரிக்கோலால் காணாமல் போனது.

அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்தில் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து வேண்டிய போஸ்களை கொடுத்த நயன், பின் படத்தைப் பார்த்து தானே தன்னைப் பார்த்து முகம் சுளித்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்லாமல், இதுபற்றி விஷாலிடம் தனிமையில் சந்தித்து கெஞ்சிக் கூத்தாடி பல காட்சிகளை நீக்கச் சொல்லி இருக்கிறார்.

அப்படி நீக்கப்பட்டதற்குப் பின்னாலும் சென்சார் வெட்டியிருக்கிறது என்றால்... படம் எந்த அளவுக்கு கவர்ச்சியா எடுக்கப்பட்டிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது நம்மால்...

வெப்துனியாவைப் படிக்கவும்