அசினுக்கு அடம்பிடிக்கும் ஹீரோக்கள்!

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (17:51 IST)
'தமிழ்ப் படமா... யோசிக்க வேண்டும்' என்கிறார் அசின். அந்த அளவுக்கு தமிழ்நாட்டை மறந்துவிட்டார். தற்போது மும்பையில் இந்தி கஜினியில் அமீர் கானுடன் ஆடிப் பாடிக்கொண்டு இருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் சல்மான் கான், அஜன்தேவ்கன் ஆகியோர் இணைந்து நடிக்க, விபுல்ஷா இயக்கும் 'லண்டன் ட்ரீம்ஸ்' என்ற படத்தில் அசின்தான் ஹீரோயின். 45 நாட்கள் தொடர்ந்து லண்டன், பாரீஸ், பஞ்சாப் என தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இருந்தும், தமிழ் சினிமாதான் நிறைய வாய்ப்புகளை வழங்கி இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. அதை மறந்துவிடாதே என்று சில தோழிகள் யோசனை கூற, வருடத்திற்கு ஒரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி பரத்பாலா இயக்க, கமலோடு ஒரு படத்திலும், இளைய தளபதியுடன் ஒரு படமும் நடிக்க சம்மதம் கொடுத்துள்ளார். அதுவும் 'லண்டன் ட்ரீம்ஸ்' முடித்தவுடன்தானாம்.

அத்தோடு, சம்பளத்தையும் கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளார். சில தயாரிப்பாளர்கள் தயங்கினாலும், நாயகர்கள் அசின்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதால்... வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு பல லட்சங்களை அட்வான்ஸாக கொடுத்திருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்