தமிழில் தெலுங்கு இயக்குனர்!

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (20:38 IST)
தெலுங்கின் பிரபலமான இயக்குனர் சூர்யகிரண். தொழில் செய்வது ஆந்திரா என்றாலும் சூர்யகிரணின் பூர்வீகம் தமிழ்நாடுதானாம். அதனால் தமிழ் சினிமா மீது ஓர் ஆர்வம்.

முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை தயாரிக்கிறார் சூர்யகிரண். இயக்கமும் அவரே. மலையாளத்தில் பிஸியாகிவிட்ட பாலாதான் ஹீரோ.

பாலா நடிப்பில் வெளிவர இருக்கும் ஒரே படம் ராஜா ஆறுமுகத்தின் மஞ்சள் வெயில். பிரசன்னா, சந்தியா நடித்திருக்கும் இப்படத்தில் பாலாவுக்கு கெளரவ வேடம்.

சூர்யகிரண் படத்தில் பாலாவுக்கு இரண்டு ஜோடிகள். படத்திற்கு அத்தியாயம் ஆறு என்று பெயர் வைத்துள்ளனர். பூஜை, போஸ்டர் என்று செலவுகளை இழுத்துவிடாமல் சிவனே என்ற படப்பிடிப்பை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார் சூர்யகிரண்.

தமிழில் பல படங்களில் நடித்திருந்தும், பாப்புலர் வெளிச்சம் விழாத பாலாவுக்கு இந்த அத்தியாயம் ஆறு புது அத்தியாயத்தை உருவாக்குமாம். நம்பிக்கையோடு சொல்கிறார் சூர்யகிரண்.

வெப்துனியாவைப் படிக்கவும்