ரீ-ஷூட் செய்யப்படும் சக்கரக்கட்டி பாடல்!

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (20:33 IST)
பைவ் ஸ்டார் ஹோட்டல் டிஸ்கொதே முதல், முச்சந்தி டீக்கடை வரை எங்கும் ஒலிக்கிறது ரஹ்மானின் டாக்சி... டாக்சி...! சக்கரக்கட்டி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டது. அதனை மீண்டும் எடுக்கிறார் இயக்குனர் கலாபிரபு.

பாடல் பிரபலமானால் அதனை மீண்டும் எடுப்பது தமிழ் சினிமாவில் புதிதல்ல. காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெறும் நாக்க முக்க பாடல் ஹிட்டானதால், ஏற்கனவே எடுத்த பாடல் காட்சியை நீக்கிவிட்டு அதிக பொருட் செலவில் அதே பாடலை ரீ-ூட் செய்கின்றனர்.

சக்கரக்கட்டி டாக்சி... டாக்சி... பாடல் எக்குதப்பாக ஹிட்டானதால், ஏற்கனவே எடுத்த பாடல் காட்சியை நீக்கிவிட்டு பாடலின் பாப்புலாரிட்டிக்கு தகுந்த பணத்தைப் போட்டு பாடலை மீண்டும் எடுக்கிறார்கள்.

எடுப்பது கலாபிரபு... பணம் கொடுப்பது அவரது அப்பா தயாரிப்பாளர் தாணு. பாடலை என்ன... படத்தையே ரீ-ூட் செய்யலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்