தஞ்சை - புதுக்கோட்டை சாலை மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசலனின் சிலை அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட சிவாஜி சிலையின் அதே வடிவத்தில், உயரத்தில் இந்த சிலை அமைக்கப்படுகிறது.
சிலையை கமல்ஹாசன் திறந்து வைப்பதாக இருந்தது. இப்போது திறந்து வைக்க இருப்பவர் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். வரும் 15 ஆம் தேதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.
அக்டோபர் 1 சிவாஜி கணேசனின் 80வது பிறந்தநாள். இதனை பிரமாண்டமாக கொண்டாட சிவாஜி குடுத்பத்தினர் விரும்புகின்றனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள முதல்வரிடம் கேட்டிருந்தனர். அவரும் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.
தஞ்சையை தொடர்ந்து நாகர்கோவிலில், மதுரை, குமாரபாளையம் ஆகிய இடங்களிலும் சிவாஜி சிலை திறக்க ராம்குமாரும், மா. நடராஜனும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.