இயக்குனரை பாராட்டிய விஷால்!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (20:39 IST)
தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரான விஷாலின் முதல் படம் சத்யம். தமிழ், தெலுங்கு இரண்டிற்குமாக சேர்த்து 600 பிரிண்டுகள் போட்டிருக்கிறார்கள். விஷால் படத்திற்கு இத்தனை அதிகம் பிரிண்டுகள் போட்டிருப்பது இதுவே முதல் முறை.

படத்தின் பட்ஜெட் 23 கோடிகள் என்பதால் அனைவருக்கும் டென்ஷன். இந்த பதட்டத்தோடு குடும்பத்துடன் படம் பார்த்த விஷால், படம் முடிந்ததும் இயக்குனர் ராஜசேகரை கட்டிப்பிடித்துப் பாராட்டினாராம். அதேபோல், படம் பார்த்த அனைவரும் பாராட்டிய மற்ற இருவர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர், வசனகர்த்தா குணசேகரன்.

படம் பார்த்த பின், போட்ட காசு கையை கடிக்காமல் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வந்திருக்கிறதாம்.

நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு இனி ரசிகர்கள் கையில்!

வெப்துனியாவைப் படிக்கவும்