என் பெயர் குமாரசாமி!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (20:38 IST)
அளவுக்கு மீறிய தாயன்பும், அப்பாவின் அதீத அன்பும் ஒரு இளைஞனின் வாழ்வை எப்படியெல்லாம் புரட்டிப் போடும் என்பதை சொல்லவரும் படம், என் பெயர் குமாரசாமி.

பல இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த ரத்ன சந்திரசேகர் படத்தை இயக்குகிறார். வீ. தஷி இசையில் இவர் எழுதிய ஆரிராரோ ஆரிராரோ... அன்னை மடியில் நானுறங்க என்ற பாடல், பி.சி. சபீஷ் பாட, ஏவி.எம். ஸ்டுடியோவின் ஆர்.ஆர். ஒலிப்பதிவு கூடத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

படத்தின் பிற பாடல்களை தாமரை, யுகபாரதி மற்றும் தொல்காப்பியன் எழுதுகின்றனர்.

புதுமுகங்களுடன் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடிப்பதாக தெரிவித்தார் ரத்ன சந்திரசேகர். புறச்சூழலே மனிதனின் வாழ்வியலை தீர்மானிக்கிறது என்ற வரிகளுக்கு உயிரூட்டுவதாக இப்படம் இருக்கும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்