தமிழில் தாரே ஜமீன் பர்!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (20:36 IST)
அமீர் கான் முதன் முறையாக இயக்கி நடித்த தாரே ஜமீன் பர் தமிழில் வெளிவருகிறது.

கற்றல் குறைபாடுள்ள (டிஸ்லெக்ஸியா) குழந்தைகளைப் பற்றி இப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்றதோடு சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது. அமீர் கானுக்கு பல்வேறு விருதுகளையும் இப்படம் பெற்றுத் தந்தது. இதில் அவர் ஓவிய ஆசிரியராக நடித்திருந்தார்.

தாரே ஜமீன் பர் தமிழில் வால் நட்சத்திரம் என்ற பெயரில் அடுத்த மாதம் வெளியாகிறது. பிரமிட் சாய்மீரா படத்தை வெளியிடுகிறது. தெலுங்கிலும் அமீர் கான் இயக்கிய முதல் படத்தை வெளியிடும் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழில் வெளியாகும் வால் நட்சத்திரத்தில் அமீர் கானுக்கு நடிகர் சூர்யா டப்பிங் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்