வெள்ளி விழா படங்கள் நிறைய இயக்கினாலும், கேன்ஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதும், பாராட்டும் தனது படங்களுக்கு கிடைக்காததில் இயக்குனர் ப்ரியதர்ஷனுக்கு வருத்தம். இந்த வருத்தத்தை போக்க, கமர்ஷியல் காம்ப்ரமைஸ¤க்கு ஆட்படாமல் அவர் இயக்கிய படம், கஞ்சீவரம்.
காஞ்சிபுரத்தின் பழைய பெயர் கஞ்சீவரம். நெசவாளர்கள் நிறைந்த கஞ்சீவரத்தின் கதையை குறிப்பாக 1942 - 1957க்கு இடைப்பட்ட காலத்தில் நெசவாளர் மத்தியில் கம்யூனிஸ கொள்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தை சொல்கிறது கஞ்சீவரம். நெசவாளராக பிரதான வேடமேற்றுள்ளார் பிரகாஷ்ராஜ்.
டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்பெஷல் பிரசன்டேஷன் பிரிவில் திரையிட கஞ்சீவரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எளிதில் யாருக்கும் கிடைக்காத கெளரவம் இது.
இதே திரைப்பட விழாவில் இதே பிரிவில் தீபா மேத்தாவின் ஹவுஸ் ஆன் ஹெவன் திரைப்படமும் திரையிடப்படவுள்ளது. செப்டம்பர் 6 ஆம் தேதி திரைப்பட விழா தொடங்கயிருக்கிறது.