சிலம்பாட்டம் கிளைமாக்ஸில் பில்லாவில் அஜித் அணிந்த அதே குளிர் கண்ணாடி, கோட், ஷூவில் தோன்றுகிறாராம் சிம்பு.
கிளைமாக்ஸில் பில்ல அஜித் போன்று உடையணிந்து நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியிருக்கிறார் சிலம்பாட்டம் இயக்குனர் சரவணன். மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார் சிம்பு. காரணம் சிம்ப்பிள். இளைய தலைமுறை நடிகர்களில் சிம்புவின் இதயம் கவர்ந்தவர் அஜித். நான் அஜித்தின் ரசிகன் என பல பேட்டிகளில் சிம்புவே தெரிவித்துள்ளார்.
மன்மதன் படத்தின் ஒரு காட்சியில் அஜித் வாழ்க, அல்டிமேட் ஸ்டார் தல வாழ்க என கோஷம் கூட போடுவார். அவரிடம் அஜித் போன்று நடிக்கச் சொன்னால்...? பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல் மகிழ்ந்து போனாராம் சிம்பு.
பில்லா கெட்டப்பில் சிம்பு வரும் காட்சிகளில் பில்லா படத்தின் பின்னணி இசையையே பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
பில்லாவுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா சிலம்பாட்டத்துக்கும் இசையமைப்பது கூடுதல் வசதி.