தீபாவளிக்கு நான் கடவுள்!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (20:20 IST)
படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் டாப் டென்னுக்குள் எப்போதும் இருந்துவரும் படம் பாலாவின் நான் கடவுள்.

சமூகம் புறந்தள்ளிய எளிய பிச்சைக்காரர்களின் வாழ்வை, அவர்களின் நியாயத்தை செல்லுலாய்டில் செதுக்கியிருக்கிறார் பாலா. திண்ணையில் இருவர் பேசுவதையே என்னால் முழுப் படமாக எடுக்க முடியும். ஆனால், நான் எதிர்பார்த்து கிடைக்கும் வரை அவர்களை திண்ணையை விட்டு நகர விடமாட்டேன்!

பாலாவின் இந்த பெர·பெக்சன் தான் படத்தின் தாமதத்திற்கு காரணம். ஆனால், எதற்கும் ஒரு எல்லை உண்டே! ஆம், நான் கடவுள் அனைத்து வேலைகளும் முடிந்து தீபாவளிக்கு வெள்ளித்திரைக்கு வருகிறது. பாலா - பிரமிட் சாய்மீரா பனப் பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்காமலிருந்தால், தீபாவளி ஸ்வீட்டில் நான் கடவுளையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்