எஸ்.ஏ. சந்திரசேகரனின் பந்தயம் படத்தில் ஆக்சன், சென்டிமெண்ட் அளவோடு இருக்க, கிளாமர் மட்டும் கொஞ்சம் தூக்கல். காரணம் இருவர்.
ஜெமினியில் ஓ போடு பாடலுக்கு ஆடிய ராணியை மீண்டும் பந்தயத்திற்கு ஆடவைத்துள்ளார் எஸ்.ஏ.சி. இலங்கை பாப் பாடல் சின்ன மாமியே உன் செல்ல மகளெங்கே ரீ-மிக்ஸுக்கு குத்தாட்டம் போடுகிறார் ராணி.
அத்தோடு மேக்னா நாயுடுவுக்கு உண்டு ஒரு குத்துப் பாடல். இவர்களோடு நிற்காமல், கதாநாயகி சிந்து துலானியையும் உரித்த கோழியாக்கி படம் நெடுக உலவ விட்டிருக்கிறார்.
பந்தயம் எஸ்.ஏ.சி.யின் இளமைத் திருவிழா என்கிறார்கள் யூனிட்டில் உள்ளவர்கள்.