செளந்தர்யா ரஜினியைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷும் படம் இயக்குகிறார்.
டைரக்சன் தனுஷின் கனவு. விரைவில் படம் இயக்குவேன் என்று ஒரு வருடத்திற்கு மன்பே அறிவித்தவரை, முதலில் நடிப்பில் கவனம் வை என அடக்கி வைத்திருக்கிறது அவரது குடும்பம். அவருக்கு பதில் இயக்கத்தில் குதிக்கிறார் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா.
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உள்ளூர் படப்பிடிப்பில் அசிஸ்டெண்டாக பணிபுரிந்த இவரின் அதிகபட்ச டார்கெட், தனது தந்தையை அதாவது ரஜினியை இயக்குவது. அதற்குமுன் வேறு ஹீரோவை வைத்து படம் இயக்குகிறார்.
அந்த வேறு ஹீரோ தனுஷா என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை. அட்வான்ஸ் வாங்கிய படங்களை நடித்து முடிக்கவே தனுஷுக்கு இரண்டு வருடம் ஆகிவிடும். அதனால் ஐஸ்வர்யாவின் முதல்பட ஹீரோ யார் என்பது இன்னும் கோடிட்ட இடமாக நிரப்பப்படாமல் உள்ளது.