நடிகராகும் இயக்குனர்!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (16:01 IST)
மேலுமொரு இயக்குனர் அரிதாரம் பூசுகிறார். அவர் ஜி. கிச்சா.

இயக்குனர்கள் நடிகர்களாவது தமிழ் சினிமாவில் தொடர் கதையாகி வருகிறது. சேரன், அமீர் போன்ற திறமைசாலிகள் அரிதாரம் பூசிய பிறகு படம் இயக்குவதை கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளனர்.

நடிக்கப் போனால் தனித்தன்மை போய்விடும் என அமீரை எச்சரித்தார் பாலுமகேந்திரா. அதற்கு அவர், படம் இயக்குவதுதான் எனது முழு நேர வேலை என்று பதிலளித்தார். ஆனால், சொன்ன சொல்லை அமீர் காப்பாற்றுவார்போல் தெரியவில்லை.

சுப்ரமணிய சிவாவின் யோகியில் நடித்துவரும் அமீர், அடுத்து வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் நடிக்கிறாராம். யோகிக்கே இன்னும் ஒன்றரை மாத ¥ட்டிங் பாக்கி இருக்கிறது.

சுப்ரமணியபுரம் சசிகுமார் சமுத்திரகனி இயக்கும் படத்தில் நடிப்பதால், அடுத்து தான் இயக்கும் படத்தை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

சத்யராஜின் தங்கம் உள்ளிட்ட படடங்களை இயக்கிய ஜி. கிச்சாவும் நடிகராகிறார். சுந்தர் சி-யை வைத்து இயக்கும் தீ முடிந்ததும், தானே ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறார். ஹீரோவும் அவரே.

இப்படியே போனால் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பஞ்சம் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்