மீண்டும் மாதவன், வித்யாபாலன் ஜோடி!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:59 IST)
மாதவன் சிபாரிசு செய்யும் ஒரே நடிகை வித்யாபாலன். சினிமாவுக்கு வரும் முன்பே அவரை தெரியும், திறமையானவர் என காரணம் சொன்னார் மாதவன்.

மணிரத்னத்தின் குருவில் உதட்டோடு உதடு பதித்து வித்யாபாலனுக்கு மாதவன் முத்தம் கொடுத்த பிறகு சிபாரிசின் அழுத்தம் கூடியது.

இந்த ஜோடியை மீண்டும் ஒன்றிணைத்துள்ளார் ராஜ்கவுசல். இவரது ரொமாண்டிக் காதல் கதையில் மாதவனும், வித்யாபாலனும் நடிக்கின்றனர்.

ராஜ்கவுசலே இந்த ஜோடியை தேர்ந்தெடுத்தாரா இல்லை மாதவனின் சிபாரிசா?

இரண்டும் இல்லை. அதுவாக அமைந்தது என்கிறார் ராஜ்கவுசல். நம்புவோம்!

வெப்துனியாவைப் படிக்கவும்