ப்ரியதர்ஷன் படம் மீது வழக்கு!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (19:49 IST)
பொய் சொல்ல போறோம் படத்திற்கு தடைகோரி கோர்ட்டுக்க சென்றுள்ளது வட இந்திய பட நிறுவனம் ஒன்று.

ப்ரியதர்ஷன் யு டி.வி.யுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் பொய் சொல்ல போறோம். கிரீடம் விஜய் இயக்கம். இது டாண்டவ் நிறுவனம் இந்தியில் எடுத்திருக்கம், கோஷ்லா கா கோஷ்லா படத்தின் தழுவலாம். முறையான அனுமதி பெறாமல் இந்திப் படத்தை தமிழில் எடுத்திருக்கிறார் ப்ரியதர்ஷன். அதனால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

பொய் சொல்ல போறோம் படத்தை இம்மாதம் 29 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார் ப்ரியதர்ஷன். திடீர் வழக்கால் படத்தின் ரிலீஸ் கேள்விக்குறியாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, சந்திரமுகி, குசேலன் ரீ-மேக் தொடர்பாக ப்ரியதர்ஷனுடன் முட்டிக் கொண்ட பி. வாசுவுக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி. இவர் (ப்ரியதர்ஷன்) எப்பவுமே அடுத்தவங்க கதையைதான் சுடுவார் என தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார். தனது சந்திரமுகியை சுட்டுதான் இந்தியில் ப்ரியதர்ஷன் பூல் புலையா படத்தை எடுத்தார் என புகார் கொடுத்தவர் வாசு என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்