தாம்தூம் படத்தில் ஜீவா முடிக்காமல் விட்ட பகுதிகளை, பி.சி. ஸ்ரீராம் துணையோடு படமாக்கியவர் மணிகண்டன். உள்ளம் கேட்குமே முதல் ஜீவாவிடம் உதவியாளராக இருப்பவர்.
மணிகண்டன் முழுமையான இயக்குனராகும் வாய்ப்பை வழங்கியுள்ளது குளோபல் ஒன் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் ஆர்யாவை வைத்து தயாரிக்கும் படத்தை மணிகண்டன் இயக்குகிறார். மனம் கவரும் காதல் கதையாம் இது.
நான் கடவுள், சர்வம் என தொடர்ந்து இரு ஹெவி சப்ஜெக்டில் நடிப்பதால், ஒரு மாறுதலுக்கு மணிகண்டனின் மென்மையான காதல் கதையில் நடிக்கிறாராம் ஆர்யா.
கதாநாயகி யார் என்பதை முடிவு செய்யும் வேலை நடந்து வருகிறது.