மீண்டும் பிஸியாகிறார் ராதாரவி!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (19:41 IST)
நடிகர் சங்க செயலாளராக இருக்கும் ராதாரவி மீண்டும் சினிமாவில் பிஸியாகிறார். நடிகராக அல்ல என்பது புதிய தகவல்.

நடிப்புடன் படங்களைத் தயாரித்து கையை சுட்டுக் கொண்டவர் ராதாரவி. கட்சி மாறி அ.தி.மு.க.வில் இணைந்த பிறகே ஓரளவு அவரால் கடனிலிருந்து மீள முடிந்தது. படத்தை தயாரிக்கும் அளவுக்கு அவரது நிலைமை தற்போது முன்னேறியிருக்கிறது.

விரைவில் ருத்ரதாண்டவம் என்ற படத்தை தயாரிக்கிறார் ராதாரவி. பல நாடகங்களுக்கு இயக்குனர் ஸ்தானத்தில் இருந்து செயல்பட்டும், இதுவரை எந்த சினிமாவையும் இவர் இயக்கியதில்லை. அந்தக் குறையும் விரைவில் மறைய இருக்கிறது.

பக்காவாக ஸ்கிரிப்ட் ஒன்றை தயாரித்திருப்பவர், பிரபல தயாரிப்பு நிறுவனங்களை ஸ்கிரிப்டுடன் அணுகியிருக்கிறார். எந்த நிமிடமும் ராதாரவி இயக்கும் படத்தின் அறிவிப்பு வரலாம்.

உங்கள் அப்பாவின் ரத்தக்கண்ணீரையே நீங்கள் ரீ-மேக் செய்யலாமே ஜி!

வெப்துனியாவைப் படிக்கவும்