சென்னையில் ஜப்பான் திரைப்பட விழா!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (19:39 IST)
வருகிற 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா நடைபெறுகிறது.

12 ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் நடிகை சுஜிதா குத்து விளக்கேற்றுகிறார். ஜப்பான் துணை தூதரக அதிகாரி க¤வோ மினகாவா திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறார்.

ஸ்விங் கேர்ள்ஸ், மை சன்ஸ் உள்ளிட்ட ஜப்பானின் சிறந்த ஐந்து திரைப்படங்கள் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

தொடக்க விழாவும், திரைப்படங்களும் சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடைபெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்