கையிழந்த நடிகரின் 'மாற்றம்'

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (19:38 IST)
சினிமா விபத்தில் ஒரு கையை இழந்தவர் ஸ்ரீதர். இவர் பல படங்களில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

'அஞ்சாதே’ படத்தில் நரேனின் நண்பராக இவரை நடிக்க வைத்தார் மிஷ்கின். வெகுளியான நடிப்பில் அந்த கதாபாத்திரத்துக்கே உயிர் கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் ஸ்ரீதர்.

கையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத இவர் விரைவில் இயக்குனராகிறார். வசூல் படத்தை தயாரித்த ரோஷன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் இவர் இயக்கும் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. படத்துக்கு மாற்றம் என்று பெயர் வைத்துள்ளார் ஸ்ரீதர்.

அஞ்சாதேயில் நடித்தபோது, நடிகனாக மட்டுமின்றி மிஷ்கினின் உதவியாளராகவே ஓடியாடி வேலை பார்த்தார் ஸ்ரீதர். அந்த தன்னார்வத்திற்க கைமேல் கிடைத்த பலனே, மாற்றம்!

கலக்குங்க ஸ்ரீதர்!

வெப்துனியாவைப் படிக்கவும்