இந்தியில் குசேலனை வெளியிடக் கூடாது! -ப்ரியதர்ஷன்
சனி, 9 ஆகஸ்ட் 2008 (11:03 IST)
பொள்ளாச்சியில் பில்லு பார்பரை இயக்கிக் கொண்டிருக்கிறார் ப்ரியதர்ஷன். கதபறயும் போள் படத்தின் இந்தி ரீ-மேக். மம்முட்டி வேடத்தில் நடிப்பது ஷாரூக்கான்.
கதபறயும் போள் படத்தின் தமிழ் ரீ-மேக் குசேலனை இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிட வாசு முழுவீச்சில் வேலை செய்வதாக வெளியான செய்தியால் கடுங்கோபத்தில் இருக்கிறார் ப்ரியதர்ஷன்.
குசேலன் தயாரிப்பாளர்கள் கதபறயும் போள் படத்தின் தமிழ், தெலுங்கு உரிமையை மட்டுமே வாங்கியுள்ளனர். இந்தி உரிமையை ஷாரூக்கான் வாங்கியிருக்கிறார். குசேலனை தமிழ், தெலுங்கு தவிர்த்து வேறு எந்த மொழியிலும் டப் செய்து வெளியிடக் கூடாது என ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளது என காட்டமாக கூறினார் ப்ரியதர்ஷன்.
குசேலன் திரைப்படத்தில் ரஜினியை ஓவர் பில்டப்பில் காட்டியிருப்பதாகவும், தனது பில்லு பார்பரில் ஷாரூக்கானுக்கு அப்படி எந்த பில்டப்பும் இல்லை எனவும் கூறினார்.
ஒரு நடிகரை ஓவராக பில்டப் செய்ய, தான் அந்த மாதிரி இயக்குநர் அல்ல எனப் போகிற போக்கில் பி.வாசுவையும் இடித்துரைத்திருக்கிறார்.
ரீ-மேக் படத்திற்காக இந்த பைட்டா? அட, ராமா!