தெலுங்கில் விஷால்?

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (18:54 IST)
விஷாலின் அடுத்தப் படம் இன்னும் மர்மமாகவே உள்ளது. சொந்தமாக இயக்கி நடிக்கும் படமா அல்லது பிருத்வி இயக்கும் படமா? விடை தெரியாத நிலையில் இன்னொரு செய்தி, விரைவில் தெலுங்கு படமொன்றில் விஷால் நடிக்கிறார்!

விஷாலின் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவில் நல்ல கலெக்சனுடன் ஓடன. நேரடி தெலுங்கு படங்களில் நடிக்கச் சொல்லி நாயுடுகள் விஷாலை நெருக்குகிறார்கள்.

தெலுங்கு மார்க்கெட்டை மனதில் வைத்தே சத்யம் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரித்தனர். சத்யம் சல்யூட் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது.

தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வி.வி. விநாயக்கின் படத்தில் விஷால் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். நேரடி தெலுங்குப் படமான இது, இந்த வருட இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்