முன்னிணியில் குசேலன் வசூல்!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (19:43 IST)
தசாவதாரத்தின் ஏழாவது வார வசூலை பின்னக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது குசேலன்.

ஏழாவது வாரம் சென்னை மாநகரில் மட்டும் தசாவதாரம் வசூலித்தது சுமார் 15 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய். வெள்ளிக்கிழமை ரஜினியின் குசேலன் வெளியானது. வெள்ளி, சனி, ஞாயிறு... மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் இதன் வசூல் சுமார் 81 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்.

ஐம்பது நாட்களாக தொடர்ந்து பாக்ஸ் ·பிஸில் முதலிடத்தில் இருந்த தசாவதாரத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளது குசேலன்.

அதேநேரம், தசாவதாரத்தின் முதல் மூன்று நாள் வசூல் குசேலன் வசூலைவிட ஏறக்குறைய பதினைந்து லட்சங்கள் (சென்னையில் மட்டும்) அதிகம்.

ஏழவாது வார இறுதியில் சென்னையில் மட்டும் தசாவதாரத்தின் மொத்த வசூல் 10.08 கோடி! இது சிவாஜி வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்