கொள்கையை மாற்றிய நரேன்!

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (18:00 IST)
அர்னால்டு ஸ்வாஸ்நேகர், ஜாக்கி சான், நம்மூர் ரஜினி என உலகப் புகழ்பெற்ற நடிகர்கள் அனைவரும் ஆக்சன் ஹீரோக்களே! நேற்று நடிக்க வந்த நடிகர்களும் ஆக்சன் மகுடிக்கு மயங்க இதுவே காரணம்.

வெற்றியின் பாதையை முதல் படத்திலேயே தெரிந்துகொண்ட நரேன், ஆக்சன் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்தார். சொன்னபடி அவர் நடித்த மூன்று படங்களுமே ஆக்சன் படங்கள். தித்திப்பு என்றாலும் அளவுக்கு மீறினால் திகட்டத்தானே செய்யும்.

தனது ஆக்சன் கொள்கையை கொஞ்சமாக தளர்த்தியிருக்கிறார் நரேன். செல்வராகவனின் உதவியாளர் சொன்ன கதை நரேனை இம்ப்ரஸ் செய்துள்ளது. ஹியூமர் கலந்த வேடம், மதுரை பின்னணி!

நல்ல கதையை நழுவவிடுவானேன் என்று நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 'பூக்கடை ரவி' என்ற அந்தப் படம் அடுத்த வாரம் தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்