தாதா... ரவுடி... பொறுக்கி... ஜீவன் நடித்த அனைத்துப் படங்களிலும் இதுவே அவரது முகவரி. இதனை மாற்றியமைக்கும் விதமாக வருகிறது, கிருஷ்ணலீலை!
கவிதாலயா தயாரிப்பில் ஸெல்வன் இயக்கும் இப்படத்தில் ஐ.ஏ.எஸ்.-க்கு படிக்கும் மாணவனாக வருகிறார் ஜீவன். லீலை என்றதும் மன்மதலீலையோ என பலருக்கு சந்தேகம். ஆனால் அப்படி எதுவுமில்லை. இந்த லீலை வேறு.
அதர்மம் தலைதூக்கும் போது அதை அழிக்க அவதாரம் எடுப்பவர் கிருஷ்ணர். அப்படி அதர்மத்தை அழிக்க புறப்படும் ஒருவனின் கதையே கிருஷ்ணலீலை.
பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறாராம் ஸெல்வன். கீதை கதையில் ஜீவன்!