விஜயின் ஐம்பதாவது படம்!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (19:40 IST)
விஜயின் ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு திருவிழா. அவரின் ஐம்பதாவது படம்? கேள்விக்பப் பின்னே ஒரு பிரமாண்ட கொண்டாட்டம் தெரிகிறதல்லவா... அதற்காக தயாராகி வருகிறார் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன்.

நாளைய தீர்ப்பு படம் மூலம் விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சி. தொடர்ந்து பல படங்களை விஜயை வைத்து அவர் இயக்கியதே இன்று விஜய் இந்த உயரத்தை எட்ட காரணம். அவரே விஜயின் ஐம்பதாவது படத்தை... பதற வேண்டாம், ஐம்பதாவது படத்தை தயாரிக்க மட்டும் செய்கிறார்.

எஸ்.ஏ. சந்திரசேரனின் வி.வி. கிரியேஷன்ஸ் தயாரிக்க, படத்தை யார் இயக்குவது என்பது முடிவாகவில்லை. அனேகமாக அவர் அறிமுக இயக்குனராக இருக்கலாம்.

மகனின் ஐம்பதாவது படத்தை எப்படி பிரமாண்டப்படுத்தலாம் என இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டார் எஸ்.ஏ.சி.!

வெப்துனியாவைப் படிக்கவும்