குசேலன் சிறப்பான தொடக்கம் - திரையரங்கு உரிமையாளர் மகிழ்ச்சி!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (19:36 IST)
ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த படம். பன்ஞ் வசனமில்லை, ·பைட் இல்லை. முக்கியமாக ரஜினி சவால் விட்டு ஜெயிக்க ஒரு வில்லனில்லை!

ரசிகர்கள் குசேலனை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

நிலவரத்தை தெரிந்துகொள்ள கமலா திரையரங்குக்கு ஸ்பாட் விசிட் அடித்தோம். ரொம்ப சிறப்பான ஓபனிங் என்றார் திரையரங்கின் உரிமையாளர் வள்ளியப்பன். முதல் மூன்று நாளும் ஹவிஸ·புல். முன்பதிவும் நல்லா இருக்கு என்றார் திருப்தியுடன்.

நன்றாக ஓடிக் கொண்டிருந்த தசாவதாரத்தை தூக்கிவிட்டு குசேலனை திரையிட்டிருக்கிறார்கள். காரணம் கேட்டதற்கு, ஐம்பது நாட்களுக்குப் பிறகு இவ்வளவு தியேட்டர்ஸ் வேண்டாம்னுதான் தூக்கினோம். இதனால் தசாவதாரம் ஓடற மத்த தியேட்டர்களில் கூட்டம் அதிகரிக்கும். தவிர குசேலனுக்கு ஓவன் ப்ளோ ஆகிய கூட்டமும் அங்கே போகும் என்றார்.

49 நாட்களில் கமலா திரையரங்கில் மட்டும் ஏறக்குறைய 34 லட்சங்கள் வசூலித்துள்ளது தசாவதாரம். சிவாஜி வசூல் இன்னும் அதிகம். நூறு நாட்களில் ஏறக்குறைய 56 லட்சங்கள்.

குசேலன் இதனை முந்துமா என்பதே இப்போதைய கேள்வி!

வெப்துனியாவைப் படிக்கவும்