ரஜினி விளக்கம் - சீமான் ஆதரவு!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (19:32 IST)
ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்கலாமா? கூடாது... நானாக இருந்தால், கர்நாடகாவில் படம் வெளியாகாமலிருந்தால் என்ன நஷ்டம் ஏற்படுமோ அதை சம்பளத்தில் விட்டுக் கொடுத்திருப்பேன்!

சீனியர் நடிகர்கள் சிலர் ரஜினி மீது 'சுள்'ளென்று விழுந்திருக்கும் நிலையில், ரஜினியின் விளக்கம் கேட்டு அவரை ஆதரித்துப் பேசியுள்ளார் சீமான்.

ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில், குசேலன் தொழில்நுட்பக் கலைஞர்களுக்க உதவி வழங்கும் விழா. இதில் பேசிய பாலசந்தர், ரஜினி விஷயத்தில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லபடியாக அமையட்டும். தமிழ் சினிமா உலக அளவில் பேசப்படும் இந்தச் சூழலில் நமக்குள் சுவர் எழுப்பிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அவருக்குப் பிறகு பேசவந்தார் ரஜினி. பிரச்சனையை வளர்க்க விரும்பவில்லை என்பது அவரது ஹைக்கூ பேச்சு உணர்த்தியது. வன்முறையில் ஈடுபடுகிறவர்களைத்தான் உதைக்க வேண்டும் என்று சொன்னேன். இதை அப்போதே சொல்லியிருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்றார்.

ரஜினியின் விளக்கத்தை முழுமையாக ஆதரிக்கிறார் சீமான். ரஜினி கடிதம் எழுதியது அறிந்து முதலில் ஆத்திரப்பட்டேன். நிதானமாக யோசித்துப் பார்த்ததில் அவர் செய்தது சரி என்றே தோன்றுகிறது. அவர் நிலைமையில் நானாக இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேன்.

மூக்கிற்கு மேலே கோபத்துடன் அலையும் சீமானின் இந்த ஆதரவு பேச்சு, ரஜினி மீதான எதிர்ப்புகளை அமுக்கியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்