செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவும், வார்னர் பிரதர்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்குவதாகத்தானே செய்தி வெளிவந்தது. தவறு! ஆக்கர் ஸ்டுடியோ தனியாக இப்படத்தை தயாரிக்கிறது.
அஜித்தை ஹீரோவாக வைத்து வெங்கட்பிரபு சொன்ன கதை சில தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை. சென்னை 600 028 படத்தை வெற்றி பெறவைத்தும் வெங்கட்பிரபுவிடம் நம்பிக்கை குறைவு.
இந்நிலையில் செளந்தர்யா, தனது ஆக்கர் ஸ்டுடியோவுக்கு வெங்கட்பிரபுவின் ஸ்டைலிலேயே ஒரு படம் இயக்கித்தர கேட்க, சந்தோஷமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
முந்தைய இரு படங்களைப் போல இதிலும் நான்கு பேர் நடிக்கிறார்கள். படத்தின் பெயர் கோவா.