சென்னையை தொடர்ந்து மதுரையிலும் இந்த மாதம் 8 தேதி முதல் 14 ஆம் தேதி வரை குறும்பட - ஆவணப்பட பயிற்சி பட்டறை நடக்கிறது.
சென்னை பயிற்சி பட்டறையில் பாலுமகேந்திரா, மிஷ்கின் கலந்து கொண்டனர். மதுரை பட்டறையில் பங்கேற்று தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இருப்பவர் சுப்ரமணியபுரம் இயக்குனர் சசிகுமார்.
இவருடன் சுப்ரமணியபுரத்தின் கேமராமேன் கதிரும் பட்டறையில் பங்கேற்று கேமரா குறித்து அதன் தொழில்நுட்பங்களை விளக்குகிறார்.
இந்த அரிய வாய்ப்பை நிழல் இதழும் தமிழ்நாடு குறும்பட - ஆவணப்பட படைப்பாளிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. அனைவரும் இதில் பங்குபெறலாம். எளிய கட்டணத்தில் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்து தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு நிழல் ஆசிரியர் திருநாவுக்கரசை 94444 84868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்!