அஜித்தை இயக்க விரும்பும் அமீர்!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (19:25 IST)
புயல் அடித்தாலும் புன்னகை தொலைக்காமல் இருக்கிறார் அஜித். இந்தப் பொறுமைக்கு எதிர்பாராத இடங்களிலிருந்தும் பூங்கொத்துகள்.

அஜித்தா... அருமையான நடிகர். அதைவிட அருமையான மனிதர்! உள்ளம் நெகிழ சொல்கிறார் ஏகன் ராஜுசுந்தரம். அஜித்துடன் பணிபுரிய விருப்பமாக இருக்கிறார் இயக்குனர் கெளதம். இந்த வரிசையில் இப்போது, அமீர்.

பலே பாண்டியா போன்ற ஒரு கலகல படத்தை அஜித்தை வைத்து இயக்க வேண்டும். முடிந்தால் பலே பாண்டியா ரீ-மேக். அந்தரங்கமாக நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட இந்த விருப்பத்தை பேட்டி ஒன்றில் போட்டு உடைத்திருக்கிறார் அமீர்.

சிவாஜியின் பலே பாண்டியா. ஹீரோ அஜித். இயக்கம் அமீர். பில்லா ரீ-மேக் போல போட்டுத் தாக்கலாம் என தயாரிப்பாளர்களுக்கு ஒரே ஆவல்.

தல சம்மதிர்பபாரா?

வெப்துனியாவைப் படிக்கவும்