கந்தாவில் ஓவியர் அரஸ்!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (19:23 IST)
திருவாரூர் பாபு என்ற பெயரில் சிறுகதைகள், நாவல்கள் எழுதிய பாபு கே. விஸ்வநாத் இயக்கும் முதல் படம் கந்தா. தஞ்சை மண் நிறைய திரைக் கலைஞர்களை தந்திருந்தாலும், தஞ்சை மனிதர்களின் வாழ்க்கை திரையில் பதிவு செய்யப்பட்டதில்லை என்பது ஒரு குறை.

அதனை களையும் விதத்தில் கந்தாவை முழுக்க தஞ்சையில் எடுத்து வருகிறார் பாபு கே. விஸ்வநாத். படத்தில் ஹீரோவாக கரண் நடிக்கிறார்.

பாபு கே. விஸ்வநாத் கதைகளுக்கு ஓவியம் அரஸ். தனது கதைகளுக்கு உயிர் தந்த அரஸை கந்தாவில் நடிக்க வைத்துள்ளார்.

விக்ரமாதித்யன், மேலாண்மை பொன்னுசாமி இப்போது அரஸ். பிற துறை கலைஞர்கள் திரைக்கு வருவதும் ஆரோக்கியமானதூன்!

வெப்துனியாவைப் படிக்கவும்