இந்தியில் வெற்றி பெற்ற ஐப் வி மேட் தமிழில் ரீ-மேக்காகிறது. மோசர் பேர் நிறுவனம் ரீ-மேக்கை தயாரிக்கிறது. பரத் ஹீரோவாக நடிக்கிறார்.
பிரிவோம் சந்திப்போம் படத்தை இயக்கிய கரு. பழனியப்பன் படத்தை இயக்குகிறார். கரு. பழனியப்பனின் முதல் படம் பார்த்திபன் கனவு ஹிட். பிறகு இயக்கிய சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் இரண்டும் சரியாகப் போகவில்லை. அதனால் பாதுகாப்பாக ரீ-மேக் படத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
பரத்துக்கு ஜோடியாக நடிக்க இன்னும் நாயகி சிக்கவில்லை. தமன்னா பிஸி என்பதால், கால்ஷீட் இல்லை என முன்பு மறுத்த த்ரிஷாவையே மீண்டும் நடிக்க வைக்க முயன்று வருகிறது மோசர் பேர் நிறுவனம்.