விஜயகாந்தின் தாராளம்!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (15:37 IST)
சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளர் தங்கராஜ் தயாரித்து வரும் படம் எங்கள் ஆசான். விக்ராந்த் ஹீரோ. கெஸ்ட் ரோலில் தனது நண்பர் தங்கராஜுக்காக நடித்துக் கொடுக்கிறார் விஜயகாந்த். இவருக்கு ஜோடி, அரசாங்கத்தில் நடித்த ஷெரில் பிரிண்டோ.

படத்துக்கு மொத்தம் இருபது நாள் கால்ஷீட் கொடுத்திருந்தார் விஜயகாந்த். கதையின் போக்கும், தனது கலெக்டர் கேரக்டரும் பிடித்துப் போனதால் மேலும் இருபது நாட்கள் நடித்துத்தர சம்மதித்துள்ளார்.

குசேலனில் கெஸ்ட் ரோலில் நடித்த ரஜினி முழுப் படத்தையும் ஆக்ரமித்துக் கொண்டதுபோல், எங்கள் ஆசானிலும் நடந்துள்ளது.

நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறார் தங்கராஜ்.

வெப்துனியாவைப் படிக்கவும்