பிரியதர்ஷன் படத்திலிருந்து அசின் நீக்கம்!

வியாழன், 31 ஜூலை 2008 (20:38 IST)
அமீர் கானுடன் நடிக்கும் கஜினி ரீ-மேக்தான் பாலிவுட்டில் அசினுக்கு முகவரி. அதுவே அவருக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது ட்ராஜடி.

கஜினி இந்தி ரீ-மேக்கில் நடிக்கும் அசினுக்கு சல்மான் கானுடன் நடிக்க லண்டன் ட்ரீம்மஸ் பட வாய்ப்பும், அக்சய் குமாருடன் நடிக்க அய்சே கோ தய்சா பட வாய்ப்பும் கிடைத்தது. இதில் அய்சே கோ தய்சா படத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

ஷாருக்கானை வைத்து பில்லு பார்பரை இயக்கிவரும் பிரியதர்ஷன் உடனடியாக அய்சே கோ தய்சா படத்தை தொடங்குகிறார். அந்த நேரத்தில் கஜினியின் வெளியீடு இருப்பதால் அசினுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. இதனால் படத்திலிருந்து அவரை நீக்கிவிட்டு வேறு ஹீரோயன் தேடி வருகிறார் பிரியதர்ஷன்.

வெப்துனியாவைப் படிக்கவும்