தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த சேலம் ஏ. சந்திரசேகரன் புது வேகத்துடன் திரும்பி வந்திருக்கிறார். இவரது இலக்கு, ஒரே நேரத்தில் மூன்று படங்கள்!
இவரது தயாரிப்பில் தொடங்கப்பட்ட கில்லாடி பைனான்ஸ் பற்றாக்குறையால் பாதியில் நின்றது. இயக்குனர் ஏ. வெங்கடேஷ், ஹீரோ பரத் இருவரும் தங்கள் கால்ஷீட்டை கில்லாடிக்காக அட்ஜஸ்ட் செய்ய முன்வந்துள்ளதால், விரைவில் கில்லாடியை தொடங்குகிறார் சந்திரசேகரன்.
சுராஜ் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தை இவர் விரைவில் தொடங்க உள்ளார். அத்துடன் சென்னை 600 028, சுப்ரமணியபுரம் படங்களின் ஹீரோ ஜெய்யின் கால்ஷீட்டையும் வாங்கி வைத்துள்ளார். அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
விநியோகதஸ்தரான சந்திர சேகரன் தயாரிப்பிலும் கில்லாடி என்பதை நிரூபிக்க இந்தப் படங்கள் உதவட்டும்.