அடுத்த மாதம் 8 ஆம் தேதி புதிய கட்சி தொடங்குகிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.
ஆந்திராவில் தனது ரசிகர் மன்றம் வழியாக ஏராளமான உதவிகள் செய்து வருகிறார் சிரஞ்சீவி. குறிப்பாக ரத்ததானம், கடந்த சில மாதங்களாக சிரஞ்சீவியை அரசியலில் குதிக்கும்படி அவரது ரசிகர்கள் நிர்பந்தித்து வருகின்றனர். ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள சிரஞ்சீவியின் சாதியினரும் ரசிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்.
சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த், தம்பி பவன் கல்யாண் இருவரும் மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்தித்தனர். கட்சியின் கொடி, கொள்கை, பெயர் குறித்து விவாதித்தனர்.
தனிக்கட்சியில் ரசிகர்கள் உறுதியாக உள்ளதால், ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் மிகப்பெரிய பொதுகூகூட்டம் கூட்டி, தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட தீர்மானித்துள்ளார் சிரங்சீவி. இவரின் முடிவு ஆந்திர அரசியலில் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.