பாலா நடிக்கும் சாமிபுள்ள!

புதன், 30 ஜூலை 2008 (19:41 IST)
மலையாளத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பாலா மீண்டும் தமிழுக்கு வருகிறார். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கிறார் இவர்.

ஆக்ரா படத்தை தயாரித்த அமிர்தா ஆர்ட் புரொடக்சன் இயக்கும் படத்தில் பாலா ஹீரோ. கருவாப்பையா கார்த்திகா அவருக்கு ஜோடி. அடுத்த மாதம் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

க்ரைம் த்ரில்லர் சைக்கோ மற்றும் சூர்யகிரண் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிலும் நடிக்கிறார் பாலா.

இந்தப் படங்களுக்கான நட்சத்திர தேர்வு நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்