ஒரே படத்தில் விவேக், வடிவேலு?

புதன், 30 ஜூலை 2008 (19:40 IST)
விவேக், வடிவேலு இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள். வடிவேலு கதாநாயகனான பிறகு இந்த காம்பினேஷன் திரையில் தோன்றவில்லை. இருவருக்குள்ளும் ஈகோவா?

இல்லை என்கிறது பஞ்சாமிர்தம் யூனிட். இடும்பன், மாரீசன் ஆகிய புராண கதாபாத்திரங்கள் பூமிக்கு வந்தால் என்னாகும் என்பதே பஞ்சாமிர்தத்தின் கதை.

அபிராமி ராமநாதன் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயராம், நாசர் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். நாசருக்கு இரு வேடங்கள். நாரதர் மற்றும் கோடீஸ்வரர் வேடம்.

பஞ்சாமிர்தத்தில் விவேக், வடிவேலு இருவரையும் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அனேகமாக இருவரும் இணைந்து நடிக்கலாம் என்கிறார்கள் பஞ்சாமிர்தம் யூனிட்டில்.

இணைந்தால் பஞ்சாமிர்தத்தின் சுவை இரட்டிப்பாகும்!

வெப்துனியாவைப் படிக்கவும்