நாகூரில் பொக்கிஷம்!

புதன், 30 ஜூலை 2008 (19:35 IST)
சேரன், பத்மப்ரியா நடிக்கும் பொக்கிஷம் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேரன், பத்மப்ரியாவுடன் விஜயகுமார் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

விஜயகுமாரின் வேடத்தை ரகசியமாக வைத்துள்ளார் சேரன். தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண் ஏற்று நடித்தது போல் முக்கியமான வேடமாம் இது.

பொள்ளாச்சியில் படப்பிடிப்பு முடிந்ததும் நாகூரில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குகிறார் சேரன். நாகூரின் புகழ்பெற்ற தர்காவிலும் சில காட்சிகளை சேரன் எடுக்கவுள்ளார் என்கிறார்கள். அதற்கான அனுமதியை அவர் ஏற்கனவே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்