திருடா திருடி வந்த நேரம். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக நகரெங்கும் போஸ்டர் ஒட்டினார்கள். படத்தின் பெயர், ஒடிப் போலாமா!
தொடங்கப்படாமலே நின்றுபோன அந்தப் படப் பெயரில் ஒரு படம். கண்மணி இயக்கும் அப்படத்தில் சந்தியா ஹீரோயினாக நடிக்கிறார். மகேஷ் சரண்யா மற்றும் பலர் படத்தில் ஷக்தியுடன் நடித்துவரும் சந்தியாவுக்கு கிடைத்திருக்கும் கோல்டன் சான்ஸ் இது.
ஹீரோவாக நடிப்பவர் பரிமள் என்ற புதுமுகம். இவர் நடிகை சங்கீதாவின் சித்தி மகனாம்.
ஓடிப்போலாமா காதல் கதை. ஆனால் வழக்கமான கதையில்லை என்கிறார் இயக்குனர் கண்மணி. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.