ஐயாவில் பார்த்த நயன்தாரா அடியோடு மாறிவிட்டார். இளைத்த உடலும் மினுக்கும் அழகுமாக, பனிபடர்ந்த பெங்களூர் தக்காளி போலிருக்கிறார். இந்தப் புதுப் பொலிவுக்கு காரணம் விஷாலின் சிபாரிசு.
சத்யம் படத்துக்காக உடம்பை முறுக்கேற்ற பிரசாத் என்ற ட்ரெயினரிடம் ஸ்பெஷல் பயிற்சி எடுத்துக் கொண்டார் விஷால். நயன்தாராவும் நெடுநாளாக ஒரு நல்ல ட்ரெயினரை தேடிக் கொண்டிருந்திருக்கிறார்.
இதனை அறிந்த விஷால் பிரசாந்தை நயன்தாராவுக்கு அறிமுகப்படுத்த, அவரிடமே பயிற்சி எடுக்கத் தொடங்கினார் நயன். குசேலனிலும், சத்யம் படத்திலும் நயன்தாரா புதுமெருகுடன் தோன்ற பிரசாத்திடம் எடுத்த பயிற்சியே காரணம்.