குசேலன் வேன் - நயன்தாரா தொடங்கி வைத்தார்!

செவ்வாய், 29 ஜூலை 2008 (20:45 IST)
நெரிசலில் சிக்கி தத்தளிக்கும் கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் சாலையில் நேற்று நிலைகொள்ளாத கூட்டம். இந்த எஸ்ட்ரா நெரிசலுக்கு காரணம் நயன்தாரா.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி குசேலன் ரிலீஸாகிறது. நேற்று தொடங்கிய முன்பதிவுக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். படத்தை விளம்பரப்படுத்த குசேலன் வேன் ஒன்றை தயார் செய்தது தயாரிப்பாளர் தரப்பு.

வேனின் வெளியே ரஜினியின் குசேலன் படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். உள்ளே ஆபூர்வ ராகங்கள் தொடங்கி குசேலன் வரை ரஜினியின் அரிய புகைப்படங்கள்.

நேற்று இந்த வேன் பிரச்சாரத்தை நயன்தாரா தொடங்கி வைத்தார். இந்த வேன் குறிப்பிட்ட இடங்களில் நிற்கும். ரஜினி ரசிகர்கள் உள்ளே சென்று ரஜினியின் புகைப்படக் கண்காட்சியை ரசிக்கலாம்.

ரசிகர்களை அதிக அளவில் திரையரங்குக்கு இழுக்கவே இந்த ஏற்பாடு.

வெப்துனியாவைப் படிக்கவும்