என்னை வச்சிக்கடா இல்லை கட்டிக்கடா...

செவ்வாய், 29 ஜூலை 2008 (14:34 IST)
ரிஷி நடிக்கும் தமிழகம் படத்தில் இடம்பெறுகிறது இந்த தத்துவப் பாடல். பூஜை புனஸ்காரம் என காலத்தை விரயம் செய்யாமல் படத்தை தொடங்கிய இயக்குனர் கே. சுரேஷ்குமார் அதற்குள் பாதி படத்தை முடித்துவிட்டார். காட்சிகளை விட எடுத்த பாடல்கள் ஜோர்.

ரிஷிக்கு ஜோடி அர்ச்சனா என்ற ஆந்திர வரவு. கன்னட படங்களிலும் நடித்துள்ளாராம். ஆடிப்பாடும் அரபிப் குதிரை பாடலில் அர்ச்சனா போட்டியிருப்பது அச்சச்சோ ரக ஆட்டம்.

இவரை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறார் லக்ஷா. ஒரேயொரு குத்துப் பாடலுக்கு ஆடியிருக்கிறார் இவர். அதன் தொடக்க வரிகள்...

என்னை வச்சிக்கடா
இல்லை கட்டிக்கடா...

தமிழகத்துக்கு வரி விலக்கு உண்டா?

வெப்துனியாவைப் படிக்கவும்