ஆரோக்கியமான நிலையில் ஆடியோ விற்பனை!

திங்கள், 28 ஜூலை 2008 (20:33 IST)
இறங்குமுகத்தில் இருந்த ஆடியோ விற்பனையை ஏறுமுகத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள்.

தொலைக்காட்சி சானல்களின் பெருக்கம், ·ப்.எம். ரேடியோக்களின் ஆதிக்கம், இணையதளங்களில் பாடல்களை இலவசமாக டவுன்லோட் செய்யும் வசதி ஆகியவற்றால் திரைப்படங்களின் ஆடியோ விற்பனை மந்தமான நிலையில் இருந்தது. இரண்டு மாதமாக இதில் மாற்றம்.

தசாவதாரம் படத்தின் ஆடியோ உரிமை இரண்டு கோடிக்கு விற்பனையானது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த குசேலன் இரண்டடேல் கோடிக்கு வாங்கப்பட்டது. இவ்விரு படங்களும் ஆடியோ உரிமை வாங்கியவர்களுக்கு பெருத்த லாபம் சம்பாதித்து கொடுத்தன.

ஹாரிஸ் ஜெயராஜின் தாம்தூம், சத்யம், ஏ.ஆர். ரஹ்மானின் சக்கரக்கட்டி, யுவனின் சரோஜா ஆகியவையும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ஆடியோ விற்பனையும் இந்தப் படங்களுக்கு அமோகமாக உள்ளது.

விஜய் ஆண்டனியின் காதலில் விழுந்தேன் ஆடியோவும் ஜனங்களிடம் வாங்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 2008-ல் வெளியான படங்களைவிட பாடல்கள் நல்ல லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்