படங்களில்லை... கட்சியிலும் ஆதரவில்லை... உடனிருந்து ஆற்றுப்படுத்த அருகில் மனைவி, பிள்ளைகளில்லை. ஏறக்குறைய அனாதைக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கிறார் ராமராஜன். ஒரு காலத்தில் அடுத்த சி.எம். என்று வர்ணிக்கப்பட்டவருக்கா இந்த நிலைமை... நம்ப முடியவில்லை!
சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்கும் விருப்பம் இன்னும் ராமராஜன் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. சொந்தக் காசில் தொடங்கிய இரண்டு படங்களும் பாதியில் நின்று போனாலும் துவளவில்லை இந்த முன்னாள் ஹீரோ.
ஊரில் இருக்கும் தனது அசையா சொத்துக்கள் சிலவற்றை விற்று மீண்டும் சினிமாவில் முதலீடு செய்கிறார். ஹீரோ இவரே. கதை மற்றும் பிற விஷயங்கள் குறித்து விவாதம் நடந்து வருகிறது. படத்தின் பெயர் மேதை!
படத்துக்கு ராமராஜனின் நண்பர்கள் சிலரும் உதவி செய்கிறார்கள் என்பது ஆறுதல் செய்தி.